Share on
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோசி சேனாநாயக்கா, மயக்கும் வசீகரமும் பேரழகும் கொண்டவர். அவர் பற்றிய தனது உணர்வுகளை விபரிக்க தன்னிடம் வார்த்தைகள் இல்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூலமான வினாக்களுக்கான நேரத்தின் போது றோசி சேனாநாயக்கா எம்.பி. அமைச்சர் குமார வெல்கமவிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'அழகு ராணியாள றோசி சேனாநாயக்காவின் கேள்விக்கு பதிலளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு வசீகரமான பெண். என் உணர்வுகளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை' என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, அமைச்சர் வெல்கமவின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
'எனது உணர்வுகளை இங்கு விளக்க முடியாது. நீங்கள் வெளியே வந்து என்னை சந்தித்தால் நான் அதை விபரிப்பேன்' என காமினி ஜயவிக்கிரம பெரேராவை பார்த்து அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட றோசி சேனாநாயக்கா எம்.பி 'ஒரு பெண் என்ற வகையில் தனது வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு அமைச்சர் கருத்து கூறியிருக்கக்கூடாது' 'நான் இதை அவமானமாக கருதுகிறேன். எனது பெண்மை பற்றியும் வெளித்தோற்றம் பற்றியும் அமைச்சர் பேசியிருக்கக் கூடாது' என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம, 'நான் பெண்களை அவமானப்படுத்த மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்' என கூறியமர்ந்தார்.

0 comments :
Post a Comment