Share on
(எம்.ஐ.முஹம்மட் பைஷல் )
கஜ மிதுரே வேலைத்திட்டத்தின் கிழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைப்புற கிராமங்களில் யானைப் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில்; காட்டு யானைகளின் தொல்லைகளினானால் எல்லைக் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களையும் உயிராபத்துக்களையும் எதிர் நோக்கிவருவதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதற்கிணங்க அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கட்பட்ட எல்லைக்கிராமங்களான ஆலிம்சேனை, பாலமுனை, சம்பு நகர் மற்றும் ஆலங்குளம், தீகவாப்பி ஆகிய கிராமங்களையும், பயிர்ச்செய்கை நிலங்களையும் காட்டு யானைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் சுமார் 15 கிலோமீற்றர் வரையிலான மின்சார வேலிகள் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன.
இவ்வேலைத்திட்டம் தொடர்பாக கிழக்குமாகாண அமைச்சர் தலைமையில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அம்பாறை மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் தழணக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பிரச்சினைகளை எதிர் நோக்கிவரும் கிராம மக்களையும், அதிகாரிகளையும் அண்மையில் நேரடியாகச்சந்தித்து பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டனர்.

0 comments :
Post a Comment