அம்பாறை அரச பஸ் டிப்போக்களை தரமுயர்த்துமாறு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை வேண்டுகோள்

Share on



(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மாவட்டத்தின் போக்குவரத்து நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில்  அரச பேரூந்து நிலையங்களை (பஸ் டிப்போக்கள்) நவீன மயப்படுத்தி தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வேலைத்திட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் தலைவரும், தொலைத்தொடர்புகள் அமைச்சருமான றஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் மேலதிக செயலாளர் மல்காந்தி குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற முன்னெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள பஸ் டிப்போக்கள் பல்லாண்டு காலமாக எந்தவித அபிவிருத்தியும் செய்யப்படால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இன்றும் காட்சி அளிக்கின்றன.

இது விடயமாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். இன்று பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் எமது நாட்டில் அரச போக்குவரத்து முறைமைகளில் இன்னும் பழமையானவற்றையே மேற்கொண்டவருகின்றனர்.

ஆக எதிர்வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக எமது பிராந்தியத்திற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பார்வையிட வரவுள்ள இந்நிலையில் போக்கவரத்து துறையினையும் கவனம் செலுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென அமைச்சர் மேலும் வேண்டிக் கொண்டார்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ், இரானுவ உயரதிகாரிகள் என பலர் பலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :