அம்பாறை வட்டமடு வயல் பிதேசத்தில் சுழல் காற்று மழையினால் குடிசையில் மரம் வீழ்து விவசாயி பலி.



(ரீ.கே. றஹ்மத்தல்லா)


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில் வீசிய சுழற்காற்றின் காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் வயலில் காவல் புரிந்து வந்த விவசாயி நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை பரிதாபகரமான முறையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
கண்ணகிபுரம் 2ம் பிரிவைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி சுப்பையா மகேஸ்வரன் வட்டமடு பிதேசத்திலுள்ள தமது விவசாயப் பயிர்ச்செய்கையை காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் அங்கு குடிசையொன்றை அமைத்து அதில் காவல் புரிந்து வந்துள்ளார்.
சம்பவதினம் மாiலை கடும் காற்றுடன் பெய்த அடை மழையின் காரணமாக அருகிலிருந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் இவ்விவசாயி கடும் காயங்களுக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். மழை காரணமாக தஞ்சமடைந்து அவருடன் இருந்த மேலும் நான்கு விவசாயிகள் தெய்வீகத்தனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :