பாடசாலைகளுக்கு பசலை தயாரிக்கும் கொள்கலன்கள்

Share on
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் திங்கட்கிழமை நேற்று (3.12.2012) பசலை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கப்பட்டன.

பாடசாலைகளின் தோட்ட நடவடிக்கைகளுக்காக இந்த பசலை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கப்பட்டதாக பெண்களுக்கான வலுவூட்
டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பனருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி, ஏறவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயம், காங்கேயனோடை அல் அக்சா வித்தியாலயம், மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்ப மகாஜனக் கல்லூரி, உட்பட 12 பாடசாலைகளுக்கு இந்த பசலை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கப்பட்டது.

இதை வழங்கி வைக்கும் வைபவத்தில் சல்மா ஹம்சா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்ப மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

ஓவ்வொரு பாடசாலைக்கும் மூன்று கொல்களன்கள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :