மழை தொடருமாயின் ஆபத்து : அவதானமாக இருங்கள்!

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களிற்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் குறித்த பிரதேசங்கள் பாரிய ஆபத்திற்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இப் பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் மலை சரிந்து விழும் அபாயங்கள் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எனவே இப்பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை மாத்தளை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக 16 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

(தெரண)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :