Share on
அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் இருவர் குறித்த பிரதேசங்களிற்கு சென்றுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல புவிச் சரிதவியல் மத்திய நிலையத்திற்கு கடந்த (29) மாலை அப்பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றதாக இப் பணியகத்தின் தலைவர் தெரிவத்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் வேறு சில பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்தே இது தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக பணியகத்தின் தலைவர் என்.பீ. விஜயானந்த மேலும் தெரிவத்துள்ளார்.

0 comments :
Post a Comment