Share on
( எம்.ஐ.முஹம்மட் பைஷல் )
க.பொ.த. (சாஃத) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதி கருதி டிசெம்பர் இன்று தொடக்கம் எதிர்வரும் 08 திகதி வரை ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அதன் ஆணையாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்துள்ளார்.
க.பொ.த.(சாஃத) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சில அதிபர்கள் இதுவரையும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் வார நாட்களுக்கு மேலதிகமாக சனிக்கிழமை நாட்களிலும் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்தி செய்த சகல மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனால் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெற்றிராத அல்லது கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையில் ஏதேனும் அச்சீட்டுப் பிழைகள் காணப்படுமாயின் 0112508022, 0112583122, 0112585043 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கும் படியும் அல்லது 0112593634 என்ற பெக்ஸ் இலக்கத்துக்கும் அனுப்பி வைக்குமாறும் ஆணையாளரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment