வெள்ளத்தால் சூழப்பட்ட ஏறாவூர் பிரதேச செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏறாவூர் நகர சபைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகம் தற்சமயம் நிலவும் கடும் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளதால் அதிகாரிகளும் ஊழியர்களும் கடமைக்குச் சென்று அலுவல்
செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...
களைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ஏறாவூர் நகரசபைக்கு ஏறாவூர் பிரதேச செயலகத்தை மாற்றும் ஏற்பாடுகளை நகர பிதா அலிஸாஹிர் மௌலானாவும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவும் மேற்கொண்டனர். இதேவேளை ஏறாவூரில் சுமார் ஏழாயிரம் குடும்பங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வும் இவர்களுக்கான அவசர உதவிகளை வழங்க தாம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார்.

0 comments :
Post a Comment