இறந்த குழந்தையுடன் அலைய வைத்த வைத்திய அதிகாரிகள்

Share on
11 மாத சிசுவின் சடலத்துடன் அந்த சிசுவின் பெற்றோர் பதுளைக்கும் நுவரெலியாவுக்கு அலைக்கழிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இனம் காணப்படாத நோய் காரணமாக மடுல்சீமை மெத்திகஹதென்ன வைத்தியசாலையில் உயிரிழந்த 11 மாத சிசுவின் சடலத்துடனேயே பெற்றோர் சுமார் 45 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள வைத்தியசாலைகளுக்கு அலைந்து திரிந்துள்ளனர்.

சடலத்தை பதுளை வைத்தியசாலை பிரேத அறைக்கு முச்சக்கர வண்டியில் எடுத்துச் செல்லுமாறு மெத்திகஹதென்ன வைத்தியசாலை அதிகாரிகள் இறந்த சிசுவின் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

அந்த சடலத்தை பதுளை வைத்தியசாலை ஏற்க மறுத்ததுடன் சடலத்தை   நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளனர் இதனையடுத்து  பெற்றோர்; அதே முச்சக்கர வண்டியில் சடலத்தை 45 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துசென்றனர்.

உடல் முழுதும் காணப்பட்ட 'கடிக்கு' இந்த சிசு மெத்திகஹதென்ன வைத்தியசாலையில் சிசிக்சை பெற்றுவந்தது. வருத்தம் கடுமையாகியதால் இங்கு உள்ளக நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளது.

சிசுவின் சடலத்தை பொலித்தீன் பையில் போட்டு கொடுத்த வைத்தியசாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை பதுளை வைத்தியசாலைக்கு அதை எடுத்துச்செல்லுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனனர்.

பதுளை வைத்தியசாலை பிரேத அறை பணியாளர்கள் சடலத்தை ஏற்க மறுத்ததையடுத்து  சிசுவின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்தே சடலம் மடுல்சீமை மெத்திகஹதென்னவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :