புதிய மதுபானசாலை திறப்பிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Share on
மட்டக்களப்பு ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேடர்குடியிருப்பில் அமைக்கப்படவுள்ள மதுவானசாலையின் அனுமதியை இரத்துச்செய்யக் கோரி இன்று (14) மட்டக்களப்பில் பிரதேச மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரசாங்க அதிபரிடம் இரத்துச் அசய்யக்கோரி மகஜரும் கையளித்தனர். 

ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே ஆறு மதுபான சாலைகள் இயங்கி வரும் நிலையிலேயே 7வது மதுபானசாலை வேடர்குடியிருப்பில் திறக்கப்படவுள்ளதாகவும் இதன் அனுமதியை இரத்துச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேடர்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், காங்கேயனோடை, தாழங்குடா உள்ளிட்ட கிராம மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதுடன் மதுபான சாலைகள் அதிகரிக்க தங்களுக்கான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் இதனால் பிள்ளைகளின் படிப்பு வீணடிக்கப்படுவதாகவும் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் 7வது மதுபானசாலை வேண்டாம், மதுபானசாலைகளின் மாநகரமா மண்முனைப் பற்றுப் பிரதேசம், நிறுத்து அனுமதியை என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு காந்திசிலைக்கு முன்பாக இருந்து பேரணியாகச் சென்று கச்சேரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரையும் கையளித்தனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :