Share on
முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் இப்தார் வேளைகளில் உட்கொள்ளும் உணவுகள் காரணமாக நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகியன கட்டுப் படுத்தப் படுவதாக இஸ்ரேலிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலின் ஜெரூ சலம் நகரில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்விலேயே மேற்படி விடயம் கண்டறியப் பட்டுள்ளது.

பகல் முழுதும் பசித்திருந்துவிட்டு இரவில் உட்கொள்ளும் சோறு,பாண் மற்றும் பாஸ்ட்டா போன்ற முழுமையான தானிய உணவு வகைகள் காரணமாக ஹோர்மோன்களில் ஏற்படும் மாற்றமானது நீரிழிவு மற்றும் மாரடைப்பு தொடர்பில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தானிய உணவினை பகல் நேர முழுமையான பசியின் பின்னர் இரவில் உட்கொள்வதானது திருப்தி உணர்வை ஏற்படுத்தும் ஹோர்மோனான லெப்டின்,பசி உணர்வை ஏற்படுத்தும் ஹோர்மோனான கரோலின் மற்றும் உடற் பருமன்,நீரிழிவு ஆகிய நிலைமைகளை ஏற்படுத்தும் ஹோர்மோனான அடிபோநெக்டின் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவதாகவும் அதனால் நீரிழிவு மற்றும் மாரடைப்பு நிலைமைகள் தவிர்க்கப் படுவதாகவும் குறித்த ஆய்வு தெரிவிக்கின்றது.
உலக நீரிழிவு தினம் இன்று அனுஷ்டிக்கப் படும் நிலையில் இஸ்ரேலின் குறித்த ஆய்வின் முடிவுகள் பெரிதும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

0 comments :
Post a Comment