மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது ரஞ்சன் ராமநாயக்க

Share on



மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என விமர்சித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, கைகளையும் தலைகளையும் வெட்டும் அந்த நாடுகளுக்கு இலங்கையரை அனுப்புவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமுல்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மிலேச்சத்தனமானது. காட்டுமிராண்டித்தனமானது

மிலேச்சத்தனமான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாடுகளுக்கு தமது மக்களை பணியாளர்களாக அனுப்புவதில்லை என பிலிப்பைன்ஸ், சூடான், இந்தோனேசியா போன்ற நாடுகள் தீர்மானித்துள்ளன. ஏன் இலங்கை அரசாங்கம் மாத்திரம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை? அங்கு நமது நாட்டவரை அனுப்புவதால் 600 கோடி டொலர் வருமானம் கிடைக்கும் என்பதற்காகவே அரசாங்கம் இதனைக் கண்டு கொள்ளாதிருக்கிறது.

போலியான முகவர்கள் போலியான கடவுச் சீட்டுக்களைத் தயாரித்து எமது நாட்டின் பணியாளர்களை அங்கு அனுப்புகின்றனர். அதில் ஒருவர்தான் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக். கடந்த ஏழரை வருடங்களாக அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்

மத்திய கிழக்கில் பௌத்தர்கள் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறதா? என்றும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.

இவர்தான் அவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :