வி.ரி.சகாதேவராஜா-
பொத்துவில் வரலாற்றில் இரட்டைச் சாதனை புரிந்த கபொத உயர்தரத்தில் மூன்று ஏசித்தி பெற்ற றொட்டைக்கிராம மாணவி செல்வி சாந்தலிங்கம் றியோன்சியாவை பிரபல சமூக செயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்றுமுன்தினம்(11) திங்கட்கிழமை மாலை வீடு தேடிச் சென்று சென்று பாராட்டினார்.
அவருடன் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சென்றிருந்தார்.
சாதனை மாணவிக்கு அவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு பண அன்பளிப்பையும் வழங்கினார்.
பொத்துவிலில் மிகவும் பின்தங்கிய றொட்டைக் கிராமத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு பயணித்து அங்கு அவரது வீட்டில் வைத்து அவருக்கான பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
அச் சமயம் அவரது பெற்றோர்களும் இருந்தார்கள்.
மாணவி றியோன்சியா வரலாற்றில்
அடிப்படை வசதிகளற்ற றொட்டைக்கிராமத்தின் முதல் 3ஏ பெற்ற சாதனை மாணவி என்பதோடு
பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் முதல் 3ஏ சாதனை பெற்று இரட்டை சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சாதனை மாணவி றியோன்சியாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய ஜெயசிறில்!
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.