கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கடேட் மாணவர்கள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி - சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.




எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கடேட் மாணவர்கள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி ரன்தம்பே பயிற்சி நிலையத்தில் கணிப்பீட்டு முகாமில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், மாணவர்களின் பயிற்சி மற்றும் இதர தேவைகளுக்கு உதவிகளை வழங்கிய நண்பர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் மேஜர் கே.எம்.தமீம் இன் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 38 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன் கேர்ணல் ஜி.டப்ளியு.ஜி.எச்.நிலாந்த அவர்களும் கௌரவ அதிதியாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களும் விசேட அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், 38 வது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி மேஜர் மிப்றாஸ்கான், நிர்வாக அதிகாரி கெப்டன் எம்.ஜெஹாதரன் பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதோடு மாணவர்கள் எவ்வாறான பயிற்சிகளை, எவ்வாறான சவால்களை முகம் கொடுத்தார்கள் போன்ற பல்வேறு விடயங்கள் வீடியோ காட்சியாக பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் பகிரப்பட்டது. பாதுகாப்பு சிப்பாய்களுக்கு பயிற்றுவித்த, இதர உதவிகளை வழங்கியவர்களுக்கான கௌரவ சின்னமும் வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :