நீண்ட கால இடைவேளைக்கு பிறகு மலையக மண்ணில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை உலக புகழ் பெற்ற தெய்வீக நாதஸ்வர இசை சக்ரவர்த்தி, அகில உலக சித்தர்களின் குரலின் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான், கலைமாமணி, டாக்டர் ஈழநல்லூர் பாலமுருகன் அவர்களின் நாதஸ்வர தவில் இசை கச்சேரி நடைபெற உள்ளது.
சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நூற்றாண்டுகள் பழமையான பதுளை, பசறை கோனாகலை, ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இவ் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.
உலக புகழ் பெற்ற தெய்வீக நாதஸ்வர இசை சக்ரவர்த்தி, அகில உலக சித்தர்களின் குரலின் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான், கலைமாமணி, டாக்டர் ஈழநல்லூர் பாலமுருகன் அவர்கள் மாபெரும் அதி அற்புத ராகங்களை இசைக்க இலங்கையின் தலை சிறந்த நாதஸ்வர தவில் வித்வான்களை கொண்ட தன் குழுவினருடன் நீண்ட கால இடைவேளைக்கு பிறகு மலையக மண்ணுக்கு வருகை தருகிறார்..
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி முன்னிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான நளபாகச் சக்கரவர்த்தி மதி அண்ணரின் அறுசுவை அன்னதானமும் இரண்டாயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (18)கணபதி ஹோமத்துடன் அனைத்து கிரிகைகளும் ஆரம்பமாயிருக்கிறது.
"இக் கும்பாபிஷேகம் அந்த ஊர் மக்களின் 40 வருட கனவு" என அந்த ஆலயத்தின் தலைவர் எஸ். சிம்மேந்திரன் குழுவினர் கண்ணீர் மல்க கூறினர்.
இரவு பகலாக இந்த மாபெரும் கும்பாபிஷேகத்தை தமது செலவில் நெறிப்படுத்தி ஒழுங்கமைத்த சித்தர்களின் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி. தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகள், டிரோன் போடியார், வீரமுனை சனுஷ்காந்த் ஆகியோருக்கு ஆலய பரிபாலன சபையினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment