சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் மாரடைப்பால் சற்று முன் மரணம் - இந்திய ஊடகம்

மிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் நலமாக இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா இணையத்தளம் ஒன்றில் இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது, அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் மாரடைப்பால் காலமானார் என்றும், இத் தகவலை அவருடைய மகள் சௌந்தர்யா உறுதி செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் நலமாக இருப்பதாகவும், அந்தத் தகவல் பொய்யானது என்றும் இந்திய பிரதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் இறந்து போனதாக ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களில் வதந்திகள் பரவுவதும், அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து அறிக்கை விடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்து ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படம் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன், இயக்குநர் சங்கர் தயாரிப்பில் எந்திரன் 2.0 படத்தின் இறுதிக் கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சங்கர் படத்துக்காகவே ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிலையில்தான், அவர் மாரடைப்பால் காலமானார் என்ற உறுதிப்படுத்தப்படாத அதிர்ச்சித் தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -