புனித உம்றா கடமையைச் செய்ய விரும்புவோருக்கு இலகு தவணை அடிப்படை வசதி...!


ஏ.எஸ்.எம்.ஜாவித்-

புனித உம்றா கடமையைச் செய்ய விரும்புவோருக்கு இலகு தவணை அடிப்படையில் பணம் செலுத்தி அதனை நிறைவேற்றுவதற்கு மௌலானா ஹஜ், உம்றா முகவர் நிறுவனம் அமானா தக்காபுல் வங்கியுடன் இணைந்து புதிய திட்டமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இச்சேவையானது அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள்> முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டத்ததை ஆரம்பித்துள்ளதாக மௌலானா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமித் மௌலானா தெரிவித்தார்.

இத்திட்டம் மூலம் ஒருவருக்கு உம்றா கடமையைச் செய்ய ரூபா ஒரு இலட்சத்தி பத்தாயிரம் செலவு ஏற்படுகின்றது. முழுப் பணத்தையும் செலுத்த முன்னரே புனித உம்றா கடமையைச் செய்யலாம். உம்றா செய்ய விரும்புவோர் குறித்த முகவர் நிலையத்துடன் தொடர்பு கொண்டு சகல விபரங்களையும் பெற்றுக் கொண்டு தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

முதலில் இருபத்தி ஐயாயிரம் ரூபா (25000.00) பணத்தை செலுத்துவதுடன் அமானா தக்காபுல் வங்கயில் சேர்ந்து இத்திட்டத்தின்படி ஐந்து வருடங்களுக்கு செலுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு ரூபா 1924.00 ஐக் கட்டவேண்டும்.

மேற்படி மாதாந்த தொகையை மௌலானா நிறுவனத்தின் சான்றிதழுடன் அமானா வங்கியில் கையளிக்கப்பட்டு நான்கு வேலை நாட்களுக்குள் வங்கியால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு குறித்த நபருக்கு அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் தமது உம்றா கடமையை செய்வதற்கான தினத்தை முகவர் நிலையத்தில் தொடர்பு கொண்டு மேற்கொள்ளலாம்.

மேற்படித் திட்டத்தில் சேருபவர்கள் ஒருவருடம் அல்லது இரண்டு வருடம் என்ற வகையிலும் தமது மாதாந்தத் தொகையை அதிகரித்து இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர்ந்தவுடன் உம்றா கடமையைச் செய்து விட்டு வந்து தொடந்து மாதாந்தப் பணத்தை வங்கி மூலம் செலுத்த முடியும்.

அத்துடன் இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு அமானா தக்காபுல் வங்கி மேலும் பல சலுகைகளைச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உம்றா செல்பவர்கள் வங்கியில் இஸ்லாமிய முறைப்படி காப்புறுதித் திட்டம் ஒன்றில் இணைந்தால் அவர்கள் புனித உம்றா கடமைக்கு செல்லும்போது அங்கு ஏதாவது விபத்தில் வபாத்தானால் அவர் மிகுதித் தொகையை கட்ட வேண்டிய தேவை இல்லை அத்துடன் அவரது குடும்பத்தாருக்கு சுமார் ஐந்து இலட்சம்ரூபா பண  இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவுள்ளதுடன் உம்றா கடமைக்குச் சென்று வரும்போது அவர்களின் பொருட்கள் அல்லது வேறு ஏதும் இழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் மேற்படித் திட்டத்தில் அமானா வங்கி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (19) பம்பலப்பிட்டி காலி வீதி இலக்கம் 195இல் புதிதாக திறக்கப்பட்ட மௌலானா நிறுவனத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமித் மௌலானா தலைமையில் அடம் பெற்றது இதன்போது குவைத் விமான சேவையின் சுதேஷ்> அமானா தக்காபுல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பஷால் கபூர்> அமானா லயிப் பிரதம அதிகாரி றியாஸ் ஜிப்ரி>மௌலானா முகவர் நிலைய அதிகாரிகள். ஏனைய முகவர் நிலைய அதிகாரிகள்> ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் மேற்படி முகவர் நிலையம் கொழும்பு> கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இதன் கிளை காரியங்கள் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளமை முக்கியமானது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -