சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பிராணி எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்க வேண்டும்...!

அஸ்ரப் ஏ சமத்-

வெறுமனே உப்புச்சப்பு இல்லாத விடயங்களை பூதாகரப்படுத்தி முன்னுரிமை வழங்காமல் சமூக மாற்றத்திற்கு அவர்களின் எழுத்துக்கள் பயன் பட வேண்டும்  என கைத் தொழில் மற்றும் வனிபத்துறை அமைச்சர் றிஷhட் பதியுதீன் தெரிவித்தார்

நுஸ்றி  ரஹ்மத்துல்லாவின் கடல் தேடும் நதி கவிதை தொகுதி; வெளியீட்டு விழாவும் எழுத்தாளர் , கல்விப் பிரமுகர்கள் கௌரவிப்பு விழாவும் தடாகம்  கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாடடில் கலைமகள் ஹிதாய றிஸ்வி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் கடந்த  சனிக்கிழமை இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

எழுத்துலகில் உள்ளோர் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் அல்ல அவர்களுக்கு உதவுவதற்கு பரோபதாரிகள் முன் வரவேண்டும்.

அவர்களுடைய எழுத்துப் பணியை ஊக்கிவிக்கும் திட்டங்களை நடை முறைப்படுத்துவது இன்று தலையாய கடமையாகவுள்ளது. நாம் அறிந்த வகையில் புரவலர் ஹாசீம் உமர் போன்றவர்கள் அன்றிலிருந்து இன்று வரை எழுத்தாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி  வருகின்றனர். அவர்களின் எழுத்துக்களை  நூலுருதப்படுத்தி வெளிக் கொனவதற்கு இந்த நல்ல மனம் கொண்டவர்கள்  பல்வேறு உதவிகளை புரிந்து வருகின்றார்கள். அவர்களை நாம் நன்றியுணர்வுடன் பாராட்டல் வேண்டும.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த அளவில் எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் மனோபவம் கொண்டவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றர்கள்.

தேர்தல் காலங்களில் மட்டும் சில கட்சிகள் எழுத்தாளர்கள் கௌரவிப்பு, பத்திரிகையாளர்கள் கௌரவிப்பு, பத்திரிiயாளர்கள் பாராட்டுக்கள் என விழாக்களை ஏற்படு செய்து அவர்களை கௌரவிக்கின்றனர். அத்துடன் தேர்தல் நெருங்க நெருங்க மளீர் மாநாடுகள், எழுத்தாளர் மாநாடுகள். இளைஞர் மாநாடு என்றெல்லாம் ஆர்ப்பரிக்கின்றனர்.

தேர்தல் முடிந்த கையோடு அவற்றை அடியோடு மறந்து விடுகின்றனர். இந்த நிலை எமது சமூகத்தின் சாபக்கேடு.

நான் ஒர் அரசியல்வாதி , நான் நல்ல வாசகன் எழுத்துக்களை ஊன்றி படிப்பவன் மஹிந்த அரசிலிருந்து நான் வெளியேற எத்தனித்த போது எனது ஆதரவாளர்கள், நண்பர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பலர்  என்னை வெளியேற வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள். ஆனால் பத்திரிகையிலிலும், இணையத்தளங்ளிலும ;சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை நான் வாசிக்கும் போதுதான் அவர்களது எழுத்தின் தாக்கம் நாம் வெளியேற வேண்டுமென என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. எழுத்துக்களுக்கு இவ்வாறான சக்திகள் உண்டு

நான் மஹிந்த அரசிலிருந்து வெளியேறி மைத்திரி அரசிற்கு ஆதரவளித்தமைக்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் எழுத்துக்கள் சமூம் சார்ந்த கட்டுரைளும் ஒரு காரணமாகும்.

எழுத்ததாளர்கள் அநீதிக்காக குரல் கொடுக்க வேண்டும் அதற்காக விமர்சனங்கள் செய்கின்றோம். என்ற போர்வையிலே தொடர்ந்தும் ஒருவரை குறி வைத்து தாக்கும் எழுத்துக் கலாசாரத்தை அவர்கள் முற்றாக கை விட வேண்டும்.

எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றி நாம் கலந்து பேசி வருகின்றோம்.

தடாகம் கலை இலக்கியம் வட்டம்  இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தி வருவது மிகவும் சிறப்பம்சமாகும். இவ் வட்டத்தின் முக்கியஸ்தர்களுக்கும் குறிப்பாக கலைமகள் ஹிதாயா போன்றவர்களும் பாராட்டப் படவேண்டியவர்கள். அவர்கள் இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்கிவிப்பதற்கு தமது பணியை முன்னெடுக்க வேண்டு மென  நான் ஆசிக்கின்றேன்.

 
இந் நிகழ்வில் மறைந்த கல்விமாண் எஸ்;;.எச்.எம் ஜெமீலின் நினைவாக கல்வியலாளர்கள், சமுக சேவையாளர்கள் ஊடகவியலாளர்கள்  கௌரவிப்பு நடைபெற்றது. இதில் ஜெமீலின் பாரியார் மற்றம் புதல்வர் ஜெசீல், ; ஆகியோறும் கலந்து கொண்டனர்  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -