ரமழான் கால இரவு வணக்கம் (தராவீஹ்)

ரமழான் கால இரவு வணக்கம் (தராவீஹ்)
அன்படையீர்
அஸ்ஸலாமு லைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
நபி É அவர்கள் கூறினார்கள் : யார் ரமழானில் விசுவாசத்துடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நிண்டு வணங்குகின்றாரோ அவருடைய முன்செய்த பாவங்கள் மண்ணிக்கப்பட்டு விடும். (நூல்:-புஹாரி>முஸ்லிம்)
இன்னும் நபி É அவர்கள் கூறினார்கள் : ரமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் நிண்டு வணங்குவதை நான் உங்களுக்கு எனது (சுன்னத்) வழிமுறையாக ஆக்கியுள்ளேன். (நுல்:-அஹ்மத்> நஸஈ )
மேற்படி நபி வழிச்செய்திகளில் இடம்பெற்றுள்ள இந்த தொழுகைகளையே நாம் தராவிஹ் என்று அழைக்கினறோம். தராவீஹ் தொழுகை என்பது புனித ரமழான் மாதத்தில் மட்டும் நிறைவேற்றப் படுகின்ற ரமழானுடைய விஷேடத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும்.
அண்ணை ஆயிஷா Ë அவர்கள் கூறுகின்றார்கள்நபி É அவர்கள் நள்ளிரவில் பள்ளிவாயலுக்குச் சென்று தொழுதார்கள் அப்போது சில மனிதர்களும் நபி É அவர்களுடன் இணைந்து தொழுதார்கள். மறு நாள் காலையில் மக்கள் இத்தொழுகைபற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் ஆதலால் மறு நாள் இரவு நபி É தொழுத போது அதிகமான மக்கள் அத்தொழுகையில் இணைந்து கொண்டார்கள் இவ்வாறே மூன்றாம் இரவும் நடைபெற்றது நான்காம் இரவான போது பள்ளிவாயலில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது என்றாலும் நபி É அவர்கள் பஜ்ர் தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு செல்லும் வரை இரவில் வெளி வரவில்லை பஜ்ர் தொழுகையை நிறைவேற்றியபோது நபி É அவர்கள் மக்களை நோக்கி நீங்கள் இரவு கூடியதை நான் அறியாமலில்லை என்றாலும் உங்கள் மீது இத்தொழுகை விதியாக்கப்பட்டு நீங்கள் அதனை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நான் வெளிவரவில்லை என்று கூறினார்கள். இது ரமழானில் நடை பெற்றது (நூல்:-புஹாரி> முஸ்லிம்.)
மேற்படி  நபி வழிச்செய்தி இந்த்த்தொழகயை நபி É அவர்கள் ஒருசில தினங்கள் மட்டும் மஸ்ஜிதுன் நபவியில் ஜமாஅத்தாக நிறைவேற்றியுள்ளார்கள். என்ஷம் அதன் பிறகு தமது உம்மத்தினர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு உம்மத்தினர்கள் அதனை நிறைவேற்றுவதில் குறைசெய்து விடுவார்ளோ என்ற அச்சத்தின் காரணமாக தொடர்ந்து ஜமாஅத்தாக தொழுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள் என்பன்னையும்தெழிவு படுத்துகின்றது.

அத்துடன் நபி É அவர்களின் மறைவுக்குப்பின் எந்தவொன்றும் கடமையாக்கப்படக் கூடிய வாய்ப்புக் கிடையாது எனும் நிலை ஏற்பட்ட போது இஸ்லாத்தின் இரண்டாவது ஜனாதிபதி உமர் Ê அவர்கள் மீண்டும் அத்தொழகையனை மஸ்ஜிதில் ஜமாஅத்தாக நிறைவேற்றுதை உயிர்ப்பித்தார்கள்.
அப்துர்ரஹ்மான் பின் அப்துல் காரி அவர்கள் கூறுகின்றார்கள்- நான் ஒரு நாள் ரமழான் கால இரவில் உமர் Ê அவர்களுடன் மஸ்ஜிதிற்குச் சென்றேன் அப்போது மக்கள் தனித்தனியாக தொழுதுகொண்டிருந்தார்கள் சிலர் குழுக் குழுவாக ஒருவர் தொழுகை நடாத்த சிலர் அவரைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள் இதனை அவதானித்த உமர் Ê அவர்கள் இவர்கள் அணைவரையும் ஒரே இமாமின்கீழ் ஒன்றிணைத்தால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் பிறகு உபை இப்னு கஃப் Ê அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தார்கள். (நூல்:- புஹாரி )
தராவீஹ் எனும் பெயர்
தராவீஹ் எனும் அரபுப் பதம் ஓய்வு> ராகத்> நிம்மதி என்று ப்பொருள் எவே தராவீஹ் எனும் இப்பெயர் இத்தொழுகைக்குரிய சிறப்பு மற்றும் காரணப் பெயராகும். நபி É அவர்கள் மற்றும் நம்முன்னோர்களான சஹாபாக்கள் சலபுஸ்ஸாலிஹீன்கள் ஆகியோர் இத்தொழுகையினை இரண்டிரண்டு ரகஅத்களாகவும் ஒவ்வொரு இரண்டு ஸலாம்களுக்குப்பின் அதாவது நான்கு ரகஅத்துக்களுக்குப் பின் நீண்ட ஓய்வு எடுத்துத் தொழுததனாலும் இத்தொழுகைக்கு தராவீஹ் என்று சொல்லப்படுகின்றது.
நபி É அவர்களுடைய இரவு வணக்கம் பற்றி கூறும் போது அண்ணை ஆயிஷா சித்தீக்கா Ë அவர்கள் பின் வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:

நபி É இரவில் நான்கு ரக்கஅத்கள் தொழுவார்கள் பின்னர் நான் கருனை கொள்ளும் அளவுக்கு நீண்ட நேரம் ஓய்வு எடுப்பார்கள் . (நூல்: சுனன் பைஹக்கி)
சில வேளைகளில் நபி É அவர்கள் தொழ விரும்பினால் தனது முஆஸ்ஸின் பிலால் Ê அவர்களிடம் அரிஹ்னா யா பிலால் அதாவது தொழுகை மூலம் எமக்கு ஓய்வு கொடுப்பீராக என்று கூறுவார்கள். (நூல்: ஹாசியத்துத் தஹாவி)
மேற்படி இரு அறிவிப்புக்களிலும் முதல் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஓய்வு எடுப்பார்கள் என்பதனை குறிக்க யதரவ்வஹ் எனும் சொல்லும் இரண்டாவது அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அரிஹ்னா எனும் சொல்லும்தான் ரமழானுடைய இரவுத் தொழுகைக்கு தராவிஹ் என்று பெயர் வரக் காரணமாகும்.
இது ரமழானுடைய விஷேட சுன்னத்தாகும்.
இது ரமழானுக்கு மட்டும் உரித்தான விசேடத் தொழுகையாகும். இத்தொழுகை ஏனைய காலங்களில் தொழப்படுவதுமில்லை அவ்வாறு தொழுமாறு நாம் ஆசையூட்டப்படவுமில்லை அல்லது ஏவப்படவுமில்லை.
நபி É அவர்கள் கூறினார்கள். யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை ஆதரவு வைத்தும் இராக்காலங்களில் நிண்டு வணங்குகின்றாரோ அவருடைய முன்செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்று
இவற்றைச் சரியாக புரிந்து கொள்ளாத சிலர் அல்லது புறிந்து கொண்டும் தனது கருத்துக்கு முறனாக உள்ளதே என்று என்னும் சிலர் இத்தொழுகையை வித்ரு தொழுகைடனும் கியாமுல்லைல் தொழுகையுடனும் இனைக்க முட்படுகின்றனர்.
அவர்களின் கூற்று கியாமுல்லைல் வித்று மற்றும் தராவிஹ் போன்ற அணைத்துமே ஒரே தொழுகையைத்தான் குறிக்கின்றது என்றும் சிலபோது தராவிஹ் என்று ஒரு தொழுகை கிடையாது என்றும் கூற வருகின்றனர்.
,வர்களது இக்கூற்று முற்றிலும் தவறானதாகும் என்பதற்கு பின்வரும் நபி வழிச்செய்தி பலமான சான்றாக உள்ளது.
ஸயித் பின் ஹிஷாம் ஹகீம் பின் அப்லஹ் ஆகிய இரு நபித்தோழர்களும் அன்னை ஆயிஷா சித்தீக்கா Ë அவர்களிடம் சென்று நபிÉ அவர்களுடைய இரவுத் தொழுகை (கியாமுல்லைல்) பற்றி வினவினார்கள் அதற்கு அன்னை ஆயிஷா சித்தீக்கா Ë அவர்கள் நீங்கள் யா அய்யுகள் முஸ்ஸம்மில் எனும் அத்தியாயத்தை ஓதுவதில்லையா என்று கேட்டுவிட்டு பின்வருமாறு நபி É அவர்களின் (கியாமுல்லைல்) இரவுத் தொழுகை பற்றி விளக்குகின்றார்கள்.
சூரத்துல் முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் முற்பகுதி இறக்கப்பட்ட போது அல்லாஹ் இரவுத் தெழுகையை கடமையாக்கியிருந்தான் நபி É அவர்களும் அவரது நபித் தோழர்களும் ஒரு வருடகாலம் இத்தொழுகையை நிறைவேற்றினார்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு அதன் இறுதிப் பகுதி அருளப்பட்டது அதன் பிறகு இத்தொழுகை கடமை எனும் நிலையில் இருந்து நபில் எனும் நிலைக்கு மாற்றப்பட்டது என்று விளக்கமளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மேற்படி நபித் தோழர்கள் இருவரும் நபி É அவர்களின் (வித்ர்) ஒற்றைத் தொழுகை பற்றி விளக்கம் கேட்டார்கள் அதற்கு அன்னை ஆயிஷா சித்தீக்கா Ë அவர்கள் நபி É அவர்களின் (வித்ர் ) ஒற்றைத் தொழுகை பற்றி ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள்'(நூல்:-முஸ்லிம்)
மேற்படி நபி வழிச்செய்தியில்
1.        நபி É அவர்களுடைய இரவுத் தொழுகையைப் பற்றி தனியாக வினவப்பட்டுள்ளது
2.        அவ்வறே வித்றுத் தொழுகை பற்றி வேறாக வினவப்பட்டுள்ளது​
3.        இதன் பஇ ஒரே அறிவிப்பில் இரவுத் தொழுகை பற்றி தனியாகவும் வித்று தொழுகை பற்றி தனியாகவும் இரு வேறு வினாக்கள் வினவப்பட்டுள்ளன.
4.        அவ்வறே அவ்விரு வினாக்களுக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இருவிதமான பதில்கள் வழங்கப்பட்டருக்கின்றன
இத்தகயக் காரணங்களால் மேற்படி இரவு வணக்கம் (கியாமில்லைல்) மற்றும் வித்ருத் தொழுகை ஆகிய தொழுகைகள் வெவ்;வேறான இரு வேறுபட்டத் தொழுகைகள்தான் என்பதனை எம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.
அவ்வாறே ரமழானின் இரவுத் தொழுகையும் மேற்கூறப்பட்ட இரு தொழுகைகளிலிருந்தும் வேறுபட்ட பிரத்தியேகமான ரமழான் காலத்தில் மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு விஷேடத் தொழுகை என்பதனையும் நாம் நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
எமது இந்த நிலைப்பாட்டிற்கு நபி É  அவர்களின் பின்வரும் கூற்றுக்கள் மேலும்  வலு சேர்ப்பதாகவுள்ளது.
1.        நபி É அவர்கள் கூறினார்கள் 'யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை ஆதரவு வைத்தவனாகவும் நிண்டு வனங்குகின்றானோ அவனது முன் செய்த பாவங்கள் அனைத்தும் மண்ணிக்கப்பட்டு விடும்' (நூல்:-முஸ்லிம்)
2.        இன்னும் நபி É அவர்கள் கூறினார்கள் : ரமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் நிண்டு வணங்குவதை நான் உங்களுக்கு எனது (சுன்னத்) வழிமுறையாக ஆக்கியுள்ளேன். (நுல்:-அஹ்மத்> நஸஈ )
3.        அடுத்து நபிÉ அவர்கள் இத்தொழகயை மஸ்ஜிதுன் நபவியில் ரமழான் காலத்தில் குறிப்பிட்ட சில இரவுகள்  ஜமாஅத்தாக நிறைவேற்றியுள்ளார்கள். (புஹாரி, முஸ்லிம்)
மேற்படி நபி வழிச்செய்திகளில்  முதலாவது நபி வழிச் செய்தி ரமழானில் நின்டு வணங்குபவர்களுக்கே அவர்கள் முன் செய்த பாவங்கள் மண்ணிக்கப்படுவதாக நபி É அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள். என்று கூறுகின்றது அவ்வறே ஏனைய காலங்களில் நின்டு தொழுபவருக்கு அவ்வாறான நன்மாராயம் வழங்கப்படவில்லை எனபனையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இந்த நபிவழிச்செய்திகள் அத்னையும் ரமழான் மாத்த்தில் நாம் நோன்பு நோற்பது எவ்வாறு கடமையாக இருக்கின்தோ அவ்வறே அம்மாத்த்தில் இரவில் நிண்டு வணங்குவது சுன்னத் அதாவது நபி வழியாகும் என்பதனையும் எமக்குத்திவு படுத்துகின்றது.
எனவே இத்தகய பல காரணங்களால் இது ரமழானிற்கு மாத்திரமுள்ள விசேட தொழுகைதான் என்பது உறுதியாகின்றது.
முனாப் நுபார்தீன்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :