தன்னுடைய சொந்த மகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்ட தந்தை ஒருவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன 60 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மகளுக்கு பாடசாலை செல்வதற்காக அம்மாவால் வழங்கப்பட்ட பஸ் கட்டணத்தை பறித்துவிட்டு மகளை பாடசாலைக்கு செல்ல விடாமல் தடுத்து வல்லுறவுக்குட்படுத்தியமை விசாரணையில் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இச்சந்தேக நபருக்கு நீதிவானால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளியான தந்தை நஷ்ட ஈடாக மேலும் மூன்று இலட்சம் ரூபா பணத்தை செலுத்த வேண்டுமெனவும் மேல் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரால் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றம் நீண்ட இடைவெளிக்குப் பின் தகுந்த சாட்சிகளின் படி அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதனால் ஒரு குற்றத்திற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மூன்று குற்றத்திற்கும் 60 வருட சிறைத் தண்டனையை விதித்து நீதிவான் 38 தாள்கள் அடங்கிய சாட்சிப்பத்திரத்தினை நீதிமன்றில் தெரிவித்தார். ஒரு குற்றத்திற்கு 100,000 ரூபா படி மூன்று குற்றத்திற்கும் 300,000 ரூபா பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டுமெனவும் வழங்க தவறும் பட்சத்தில் மேலும் 7 வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிவான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

0 comments :
Post a Comment