அக்கரைப்பற்று மாநகரசபை நவீன வளாகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று - படங்கள்

-கபூர்-
ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகரசபை நவீன வளாகம் திறந்து வைக்கும் வரலாற்று நிகழ்வு இன்று (29.09.2013) அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள இவ் விழாவில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாநகரசபையின் நவீன வளாகத்தை திறந்து வைப்பார்.

அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாயல் முன்றலில் நடைபெறும் துஆப் பிரார்த்தனைத் தொடர்ந்து அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக அக்கரைப்பற்று- கல்முனை வீதியூடாக மாநகர நவீன வளாகம் வரை அழைத்துவரப்படுவார். அதனைத தொடர்ந்து நவீன வளாகத்தைத் திறந்து வைத்தபின் மாநரமேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெறவுள்ள மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார்.

இன்று (29.09.2013) அக்கரைப்பற்றில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அக்கரைப்பற்று மா நகரசபை நவீன வளாகத்தின் அழகிய தோற்றம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :