கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை கோலாகல திறப்பு! பாடசாலைக்கு கணினி ஆய்வகமும் அன்பளிப்பு



பாறுக் ஷிஹான்-
லங்கையின் முன்னணி வங்கியான கொமர்ஷல் வங்கியின் (Commercial Bank of Ceylon PLC) முழுமையான உரிமையுடைய துணை நிறுவனமான CBC Finance PLC, தனது 25ஆவது கிளையைக் கல்முனையில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து கிழக்கு மாகாணத்தில் தனது நிதிச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

கல்முனை, மட்டக்களப்பு வீதி, இலக்கம் 42 இல் அமைந்துள்ள இப்புதிய கிளையானது, பிராந்தியத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

CBC Finance PLC இன் தலைவர் ஷர்ஹான் முஹ்சின் (Sharhan Muhseen) தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், நிறுவனத்தின் சிரேஷ்ட இயக்குநர் சரத் ஜயசூரிய, இயக்குநர்களான எம்.பி. தர்மசிரி, ஷர்மினி விக்ரமசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் டெலக்ஷன் ஹெட்டியாராச்சி, பிரதம வணிக அதிகாரி தம்மிக ஹபுஹின்ன மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி கிருஷ்ணந்த பெரேரா உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகப் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச வர்த்தகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Fitch Ratings அமைப்பினால் 'A(lka)' என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனம், வாகனக் குத்தகை (Leasing), நிலையான வைப்புத் திட்டங்கள் (Fixed Deposits), 'தங்கத் துணை' என்ற ரகசியமான தங்கக் கடன் சேவைகளை குறைந்த செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் விரைவான கடன் அங்கீகாரச் செயல்முறைகளுடன் வழங்கவுள்ளது.

தனது 25ஆவது கிளைத் திறப்பு விழாவை முன்னிட்டு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ், சம்மாந்துறை பகுதியிலுள்ள ஸ்ரீ கொரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு முழுமையான கணினி ஆய்வகம் ஒன்றை CBC Finance நிறுவனம் நன்கொடையாக வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :