கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்



கொழும்பு, செப்டம்பர் 24: கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24) பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கௌரவ வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சமூக வலுவூட்டல், சமூக பாதுகாப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான கௌரவ ஏ. ஆதம்பாவா மற்றும் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். பாரூக் ஆகியோருடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மருத்துவ மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, வைத்தியசாலையின் சேவைத் திறனை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான செயற்றிட்டங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் பங்களிப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொடர்புடைய தரப்பினரிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், பிராந்திய மக்களுக்குத் தரமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :