SLTES -1
BA, MA, MED PGDE, PGDEM
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் பாடசாலை வகுப்பறைகளில் உருவாகிறது என்று கூறப்படுவதுண்டு.
குடும்பத்திற்கு அடுத்தபடியாக குழந்தையின் ஆளுமையை வடிவமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது பாடசாலையே.
எழுத்தறிவு, எண்ணறிவு போன்ற அடிப்படைத் திறன்களை மட்டுமன்றி, ஒழுக்கம், பொறுப்புணர்வு, குழுவாகச் செயற்படும் ஆற்றல் போன்றவற்றையும் பாடசாலை கற்பிக்கிறது. இதனடிப்படையில் பாடசாலைக் கல்வி என்பது முக்கியத்துவமிக்கது.
இலங்கை நாகரியமடையத் தொடங்கிய காலமாகக் கருதப்படும் இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளிக்கும் நாடாகவும்
கல்வியில் கவனம் உடைய நாடாகவும் விளங்குகிறது.
இலங்கை மக்கள் தத்தமது மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் என்பவற்றினூடாக முறைசாராக் கல்வி முறைகளையும், சம்பிரதாயங்கள் மற்றும் மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாக வாழ்ந்துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.
சமகாலத்திலும் கூட ஒரு சில கிராமப் புறங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகளினூடாக நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் பழக்கம் காணப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல நூற்றாண்டு கல்வி வரலாற்றைக் கொண்ட இலங்கையை ஆண்ட மேற்குலகினர் அவர்களின் கொள்கைகளுக்கும் தேவைளுக்குமேற்ப கல்வி வாய்ப்பை இத்தேச மக்களுக்கு வழங்கினர்.
இதனால், அவர்களின் கொள்கைகளுக்கு இணங்காத பலர் கல்வி வாய்ப்பை இழந்தமையை இலங்கையின் கல்வி வரலாற்றில் காணக் கூடியதாகவுள்ளது.
கல்வியில் கவனம் கொண்ட இலங்கையில், 1836ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் ஆணைக்குழுவின் ஊடாக பாடசாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1931ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி முறைமையானது இலவசக் கல்வி என்ற நிலைக்கு மாற்றப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இம்முயற்சியின் பயனாக காலணித்துவ காலத்து இலங்கை நிருவாகப் பேரவையின் முதல் கல்வி அமைச்சரான கிறிஷ்டோபர் வில்லியம் விஜேயகோண் கன்னங்கராவினால் 1940ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறைமை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக உள்ளனர். தென்கிழக்காசி நாடுகளின் சனத்தொகையில் 98.1 வீதம் எழுத்தறிவு கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. இதில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்தவம் அளப்பெரியது.
பாடசாலை கல்வி குழந்தையின் அறிவாற்றல், உணர்ச்சி, சமூக, உடல் வளர்ச்சிகளை ஒருங்கே வளர்க்கிறது. தமிழ்,கணிதம் உட்பட ஏனைய
பாடங்கள் சிந்தனைத் திறனை வளர்க்கின்றன.
விளையாட்டு, கலை, இலக்கிய மன்றங்கள் போன்ற ,இணைப்பாடவிதான செயற்பாடுகள் படைப்பாற்றல், தலைமைத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.
ஒழுங்கான நேரப்பழக்கம், கூட்டுப்பணி, பிறரை மதித்தல் போன்ற வாழ்வியல் பண்புகளும் பாடசாலைச் சூழலிலேயே பழக்கப்படுகின்றன. கல்வி "மனித மூலதனம்" எனப்படும் ஒரு நாட்டின் மிக முக்கிய வளமாகக் கருதப்படுகிறது.
கல்வி கற்றவர்கள் உற்பத்தித்திறன் மிக்க தொழிலாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் உருவாகின்றனர்.
பொதுவாக, கல்வி மட்டம் உயரும்போது தனிநபர் வருமான வாய்ப்புகள் அதிகரிப்பதையும், வறுமையிலிருந்து மீளும் வாய்ப்பு பெருகுவதையும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய மட்டத்தில், திறமையான மனித வளம் பொருளாதார வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் அடித்தளமாகிறது.
பாடசாலை பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த குழந்தைகளை ஒரே இடத்தில் இணைக்கிறது. அது மொழி, மதம், ,இனம், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்த புரிதலையும் நட்பையும் வளர்க்கிறது. பன்மைத்துவம் நிறைந்த சமூகங்களில் சகவாழ்வு, சகிப்புத்தன்மை, அமைதியான சகவாழ்வு ஆகிய விழுமியங்களை விதைப்பதில் பாடசாலைக்கு முக்கிய பங்குண்டு.
மேலும், கல்வி, சமூக நிலை உயர்வுக்கான ஒரு வழியாகவும் பாடசாலைக் கல்விச் செயற்பாடு காரணமாகவுள்ளன.
தனது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்த, விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவது பாடசாலை கல்வியின் முக்கிய நோக்கமாகும். மாணவர் மன்றங்கள், மாணவர் பாராளுமன்றங்கள், விவாத அரங்குகள் ஆகியவை ஜனநாயக நடைமுறைகளை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்துகின்றன.
அத்தோடு, சுகாதாரக் கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பான நடத்தை, நிதி அறிவு போன்றவை பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன.
இத்தகைய பாடசாலைக் கல்வியில் ஆசியர்களின் பகிபாகமும் முக்கியத்துவமிக்கது. அர்ப்பணிப்புள்ள ஆசிரிர்களின் கடமையுணர்வும், கற்பித்தல் உணர்வும் பாடசாலைகளை உயர் நிலையை அடையச் செய்திருக்கிறது.
நூறு வீதம் எழுத்தறிவுடை மக்கள் கொண்ட நாடாக இலங்கையை உலகில் அரங்கேற்றும் இலக்கை நோக்கிய வேலைத்திட்டங்கள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையை அடைவதற்கு இலவசக் கல்வி துணை நிற்கிறது.
இலவசக் கல்வி வாய்ப்பானது ஒவ்வொரு சமூகத்திலிமுள்ள அடிமட்ட வர்க்கத்திலிருந்தும் உயர் மட்ட வர்க்கத்திலிருந்தும் பலரை பல்துறை வல்லுனர்களாக உருவாக்கியிருக்கிறது.

இவ்வாறான இலவசக் கல்வி வாய்ப்பினால் வளம்பெற்றவர்கள் இந்நாட்டை வளப்படுத்துவதற்கும், கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது சமூகத்தின் மத்தியில் வாழும் சிறார்களின் கல்வி வாய்ப்புக்குப் பங்களிப்புச் செய்வதற்கும் தங்களது ஆளுமைகளைக் பயன்படுத்த வேண்டும். இலவசக் கல்வியைக் கொண்ட இலங்கையின் கல்விமுறையானது மூன்று பிரதான படிநிலைகளைக் கொண்டது. பொதுக்கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி அல்லது பல்கலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி என்பன அவையாகும்.
பொதுக்கல்வியான பாடசாலைக் கல்வியானது முன்பள்ளிக்கல்வி, ஆரம்பக்கல்வி, கனிஷ்ட இடைநிலைக் கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று பாடசாலைகளும் 1 AB பாடசாலை I C பாடசாலை டைப் 2 பாடசாலை டைப் 3 பாடசாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளன
உலகளவில் இலவசக் கல்வி வாய்ப்பை வழங்கும் விரவிட்டு எண்ணக்கூடிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் பாடசாலைக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் கல்வி வாய்ப்பை இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பெறுவதும், பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகும்.

ஏனெனில், கல்வி வாய்ப்பைப் பெறுவது ஒவ்வொரு தனி மனிதனினதும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமை எக்காரணிகளினாலும் மறுக்கப்படுதலாகாது.
தனி மனிதனின் அடிப்படை உரிமைகளிலொன்றான கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தனது 5வது வயதில் பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்படும் ஒரு பிள்ளை கல்வியைத் தொடாமல் இடைநடுவில் அப்பாடசாலையை விட்டு விலகுவதும் அதனால் அப்பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. மாணவர்களின் இடைவிலகானது தடுக்கப்பட வேண்டியது.
இடைவிலகல் செயற்பாடானது தடுக்கப்படாதவிடத்து சமூகப் பிரச்சினைகள் உருவாகவும் வழிகோலும் என்பது வரலாற்று அனுபவ உண்மைகளாகும்.
எனவேதான், பாடசாலை கல்வி தனிநபரின் வாழ்வை மட்டுமன்றி, ஒரு சமூகத்தின்,ஒரு நாட்டின் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகும்.
அறிவு, திறன், விழுமியம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வளர்க்கும் தரமான கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சென்றடையும்போதே நிலைபேறான, நீதியான சமூகத்தை உருவாக்க முடியும்.
எனவே, ஆசிரியர், பெற்றோர், உள்ளடங்களாக பாடசாலை சமூகம் இணைந்து அரசின் ஒத்துழைப்போடு பாடசாலை கல்வியை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

0 comments :
Post a Comment