20, 32 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இறை இல்லப் பணியாளர்கள் கௌரவிப்பு
மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் (MEWS) 1448/2026 ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் செப்டெம்பர் 13ஆம் திகதி இரவு மருதமுனை மத்திய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வு, SESDO Sri Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நெறிப்படுத்தலில், அதன் தலைவர் நாபி எம். முஸ்னீ தலைமையில், சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் FMA. அன்சார் மௌலானா நழீமி அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது.
மருதமுனைப் பிராந்தியத்திலுள்ள சுமார் 21 பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஏனைய இறை இல்லப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
“மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்”
நிகழ்வில் தலைமையுரையாற்றிய SESDO Sri Lanka தலைவர் நாபி எம். முஸ்னீ, SESDO Sri Lanka தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்வைத்த “Vision 2030/2040 Maruthamunai” கொள்கைப் பிரகடனத்தின் “மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்” என்ற இலக்கை நோக்கிய பயணம், MEWS இன் புதிய நிர்வாகிகள் தெரிவுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
மருதமுனைப் பிராந்தியத்தில் உள்ள பள்ளிவாசல்களையும், அவற்றில் சேவையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஏனைய இறை இல்லப் பணியாளர்களையும் வலுவூட்டுவது இக்கொள்கையின் முக்கிய அடித்தளமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் இறை இல்லச் சேவையாற்றி வரும் பணியாளர்களை கௌரவிப்பதன் மூலம் அவர்களுக்கு உரிய சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதுடன், எதிர்கால தலைமுறையினரையும் இச்சேவையில் ஈடுபட ஊக்குவிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது MEWS அமைப்பின் புதிய யாப்பு மற்றும் உபவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சபையின் அங்கீகாரமும் பெறப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தெரிவு
2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கம், “இறை இல்லங்களில் பணியாற்றுவோரின் – நலனில் ஒன்றிணைவோம்; துன்பத்தில் துணை நிற்போம்” என்ற கொள்கை வாசகத்துடன், 1448/2026 காலப்பகுதிக்கான புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்தது.
தலைவர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AR. பைசல் கியாஸ் (பலாஹி)
செயலாளர்:
சகோ. MNM. றபாஸ்
பொருளாளர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் MH. நஜிமுத்தீன் (ஹாமி)
உப தலைவர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் SM. றியாஸ் (நழீமி)
உதவிச் செயலாளர்:
சகோ. ARM. ஸஹ்றான்
கணக்காய்வாளர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AHM. பர்ஸான் (நஹ்ஜி)
உறுப்பினர்கள்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ARM. ஜெரீர் (பஹ்மி),
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AS. அஸ்மி (ஹாமி),
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் MUM. முபஸ்ஸிர்,
சகோ. AA. முபர்ரத்,
சகோ. ZM. பௌஸான்,
சகோ. MB. அபுல் கலாம்.
புதிய தலைவர் உறுதிமொழி
புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AR. பைசல் கியாஸ், MEWS ஆரம்பிக்கப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சங்கத்தை அதன் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் புதிய உபவிதிகளுக்கு அமைவாக ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்துச் செல்ல புதிய நிர்வாகிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
MEWS இன் வளர்ச்சிக்கும் நலன்புரிச் செயற்பாடுகளுக்கும் SESDO Sri Lanka தொடர்ச்சியாக வழங்கிவரும் பங்களிப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
புதிய செயலாளர் சகோ. MNM. றபாஸ் நன்றியுரை வழங்கினார்.
நீண்டகால இறை இல்லச் சேவையாளர்களுக்கு கௌரவம்
வருடாந்த பொதுக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, 20 வருடங்களுக்கும் மேலாக இமாமத் பணியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அல்-ஹாபிழ் MMM. நஸ்றீம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அதேபோன்று, சுமார் 32 வருடங்களாக முஅத்தினாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் சகோ. AL. ஹக்கீம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இக்கௌரவிப்பு, நீண்டகாலமாக இறை இல்லங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பணியாளர்களின் பங்களிப்புக்கு சமூக மட்டத்தில் அங்கீகாரம் வழங்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வுகளை அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் றிழா கமால்தீன் நழீமி தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் SESDO Sri Lanka பிரதித் தலைவர் எம்.ஐ. பவ்மி, செயலாளர் மிஸாஜ் அஹமத், பொருளாளர் எம்.ஏ. அப்ரார் ஹுசைன், உதவிச் செயலாளர் ராசி அஹமத், சமய கலாச்சார இணைப்பாளர் அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ரிலா கமால்தீன் நளீமி, செயற்குழு உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், SESDO Sri Lanka சிரேஷ்ட ஆலோசகர் விரிவுரையாளர் AJL. வஸீல், ஊடக இணைப்பாளர் MEGA TV MBM. ராஜீத், மருதமுனை மத்திய பள்ளிவாசல் தலைவர் மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் MCM. அஸ்வர், பொருளாளர் MHM. சமீம் ஹாஜி, கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் MIM. மஸீன் இஸ்லாஹி, பொலிஸ் உத்தியோகத்தர் MI. அப்துஸ் ஸலாம், சமூகப்பணியாளர் மற்றும் ஊடகவியலாளர் மருத நியூஸ் றாசிக் நபாயிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் இரவு உணவு வழங்கப்பட்டதுடன், குழு நிழற்படங்கள் எடுக்கப்பட்டு வருடாந்த பொதுக் கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன.
“இறை இல்லங்களில் பணியாற்றுவோரின் – நலனில் ஒன்றிணைவோம்; துன்பத்தில் துணை நிற்போம்.”
ஊடகப் பிரிவு
SESDO Sri Lanka – தன்னார்வ தொண்டு நிறுவனம்
“மக்களின் வெளிச்சம்”









0 comments :
Post a Comment