தெலுங்கு மொழி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் பயிற்சிப் பட்டறை



கில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் ஏற்பாட்டில் தெலுங்கு மொழிப் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று கொழும்பில் சிறப்பாக ஆரம்பமானது.

கொழும்பு-14, ஸ்ரேஸ் வீதியில் அமைந்துள்ள “மினி அப்பலோ” வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் மாலை 5 மணியளவில் ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறையில், தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்வதிலும் அதன் பயன்பாட்டை மேம்படுத்துவதிலும் ஆர்வமுள்ள பலர் கலந்துகொண்டனர்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த சுரவரம் பிரதாபரெட்டி தெலுங்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தெலுங்கு தொண்டர் ஆசிரியர் யேரா நாயுடு ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, தெலுங்கு மொழியின் அடிப்படை அம்சங்கள், மொழிப் பயன்பாடு மற்றும் கற்றல் முறைகள் தொடர்பில் பயிற்சிகளை வழங்கினர்.

அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா மற்றும் “மினி அப்பலோ” வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் W.U. நாயுடு ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் மாலை 4.00 மணிக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தை மேலும் வளர்க்கும் வகையில் இப்பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :