சாய்ந்தமருது நகர சபையை ஹக்கீம் காங்கிரஸ் கைப்பற்ற இடமளிக்க மாட்டோம்; அக்கட்சியுடன் இணையவும் போவதில்லை – ஏ.சி. யஹியாகான் திட்டவட்டம்



சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஹக்கீம் காங்கிரஸ்) கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், அக்கட்சியுடன் தாம் இனி எந்தச் சூழ்நிலையிலும் இணையப் போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில், சாய்ந்தமருது நகர சபை தொடர்பான அரசியல் நகர்வுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அல்லது சாய்ந்தமருது நகர சபையின் ஆட்சியமைப்பில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சாய்ந்தமருது மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் அவர்களின் நீண்டகால போராட்டங்களையும் மதிக்கும் வகையில் தான் தொடர்ந்தும் செயற்படுவேன். சாய்ந்தமருது நகர சபையை ஹக்கீம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று, அக்கட்சியுடன் நான் இனி எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இணையப் போவதுமில்லை” என ஏ.சி. யஹியாகான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை தொடர்புபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படும் செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாது, அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் நம்பகமான தகவல் மூலங்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது நகர சபை தொடர்பான அரசியல் நிலவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏ.சி. யஹியாகானின் இந்தத் தெளிவான நிலைப்பாடு உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :