முதலமைச்சர் விஜயின் வித்தியாசமான அரசியல் அணுகுமுறை


முகம்மத் இக்பால்-
மு
தலமைச்சர் விஜயின் வித்தியாசமான அரசியல் அணுகுமுறை
தேர்தல் சூடு ஆறாத நிலையில், முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துப் பெற்றுள்ளார்.

இந்த நடைமுறை மூலமாக, தேர்தல் காலங்களில் இரண்டு கட்சிகளின் தொண்டர்களுக்கிடையில் உள்ள பகைமை உணர்வுகள் நீங்குகின்றது.
அத்துடன் விஜய் தலைமையிலான த.வெ.க வுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தொடர்ச்சியான தி.மு.க வின் ஆதரவுக்காக ஸ்டாலினின் இல்லத்துக்கு விஜய் சென்றுள்ளார் என்று கூற முடியாது.
 
ஏனெனில், இவ்வளவு காலமும் வெள்ளித் திரையில் பேசியது போன்று அதிகார மமதை இல்லாமல், ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்து வருகின்றார்.

எந்தவித சட்டமன்ற உறுப்பினரும் இல்லாத நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமானின் இல்லத்துக்கும் சென்றுள்ளார். இதன்மூலம் வழக்கமான அரசியலிலிருந்து விடுபட்டு வித்தியாசமான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்குவதற்கு முதலமைச்சர் முயல்கிறார் என்பது தெரிகிறது.
அவரது நல்ல எண்ணங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :