வெலிகம பாடசாலையில் குவைத் 2 மாடி வகுப்பறைக் கட்டடி அடிக்கல் நடும் வைபவம்..

அஷ்ரப் ஏ சமத்-

வெலிகம கப்புவத்தை அந்நுார் மஹா வித்தியாலயத்தில் ஞயிற்றுக்கிழமை 10 மே.2026 குவைத் அரசாங்கத்தின் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு வகுப்பறைகள் கட்டிட வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் அல் ஹிமா இஸ்லாமிக் சேவிர்ஸ் நிறுவனத்தின் கீழ் இரண்டு மாடிக்கான வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவத் கல்லுாரி அதிபர் எம்.கே.எம் றிகாஸ் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக எரிசக்தி வலுவூட்டல் பிரதியமைச்சர் பொறியியலாளர் அர்க்கம் இல்யாஸ் , மற்றும் குவைத் துாதுதரகத்தின் அதிகாரி அஷ்ஷேக் பிர்தௌஸ் (நளிமி ) குவைத்திட்ட பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஏ.ஏ நுாறுல்லாஹ் (நளிமி) அக்குரஸ்ச வலய கல்விப் பணிப்பாளர் திருமதி எச்.வை.டி.பிரியதர்சனி, மாத்தரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தான விஜயசேகர அல் ஹாஜ் எம். ஏ.எம் சக்வான் , ஏ.ஆர்.எம் அ மினுடீன், எம்.ஏ.எம் சர்வான் மற்றும் பிரதேச சபை உறுப்பிணர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அதிபர்கள் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் இப் பாடசாலையில் 164 வருடங்கள் பழமை வாய்ந்ததொரு கல்லுாரியாகும் அன்று நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. கல்லுாாி அதிபர் இங்கு இக் கல்லுாரியின் பௌதீக குறைபாடுகள் பற்றி உரையாற்றினார். இங்கு கனனி, விஞ்ஞான ஆய்வுகூட மற்றும் நுாலகங்களில் நுால்கள் இல்லாமல் இப் பாடசாலை இயங்கி வருகின்றது. எதிர்காலத்தில் இக் கல்லுாாியினை சுற்றி மதில் நிர்மாணிப்பதற்கும் 20 மில்லியம் ருபாவை திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்க்பபடும் அத்துடன் அக்குரஸ்ச கல்விவலயத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எதிர்காலத்தில் அரசாங்கம் 25 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மாணித்து்ளளது. அதில் இப் பாடசாலைக்கும் ஆசிரியர்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும்.

இக் கல்லுாாரிக்கு குவைத் அரசின் பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் கொடுக்கும் திட்டத்தில் அரபு நாடுகள் தான் நமக்கு உதவிவருகின்றன. அதற்காக நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என அஷ்ஷேக் நுாறுல்லாஹ் நளிமி தெரிவித்தார் அத்துடன் இப் பாடசாலைக்கு கட்டிடத்தினை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித தடை ஏற்பட்டும் அதனை எவ்வாறேனும் ஆரம்பிக்க வேண்டும் என ஊர் மக்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு வர்த்தக சங்கங்கள் முழு மூச்சாக முன் நின்று அதனை ஏற்படுத்தி விட்டனர் அடுத்த கட்டிட திறப்பு விழாவிற்கு குவைத் துாதுவர் இங்கு சமுகம் தந்து அதனை திறந்து வைப்பார். எனவும் அவர் அங்கு தெரிவித்தார்

குவைத் அரசாங்கம் இலங்கை்கு 27 மேற்பட்ட பாடசாலைகள், பல்கழைக்ககழக பீடங்களுக்கான கட்டிடங்கள் பௌதீக வசதிகள் சுகாதார திட்டங்களுக்கு இலங்கைக்கு கடந்த ஜ்ந்து தசாப்பதங்களாக உதவி வருகின்றது. இலங்கையர் ஒர் இலட்சத்த்திற்கும் மேற்பட்டோர்கள் குவைத்தில் தொழில் செய்து வருகின்றனர் எனவு குவைத் துாதரக அதிகாரி பிர்தௌஸ் நளிமி துாதுவர் சார்பாக அங்கு உரை நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :