சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சர்ஜுன் லாபீர்-

ம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) ஒருங்கிணைப்புக் கு

ழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில், பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கீகாரம், அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார அனுமதி, பஸ் டிப்போ அபிவிருத்தி மற்றும் விளினையடி வீதிச் சமிக்ஞை நிறுவுதல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வளத்தாப்பிட்டி குளத்தின் மேற்குப் பக்கமாக யானை வேலி அமைத்தல், சம்மாந்துறை MPCS-க்கு சொந்தமான SP/16 கிளைக் காணியினை மின்சார சபைக்கு வழங்கும் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தினை ஆரம்பிப்பது, வீரமுனை இந்து மயானப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பௌதீகத் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், நீர்ப்பாசனப் பிரச்சினைகள், புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகள் மற்றும் விவசாயக் காணி தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை எட்டுவது எனப் பல முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :