கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனினால் மடிக்கணனிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு.


ஏ.எஸ்.எம்.அர்ஹம்-
{நிருபர்}

ல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுகிய காலத்திலேயே தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்ட கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன்,கல்முனை கிரீன்ஃபீல்ட் வீட்டுத் திட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய இம்மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் முதல் கட்டமாக இவ்வுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இன்று (22) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவருமான சகோதரர் எம்.ஏ.எம் அப்கி அமீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்றது.

மாணவர்களுக்கான மடிக்கணனிகள் மற்றும் வைத்திய உபகரணங்களை, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைவரும், கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது கரங்களினால் வழங்கி வைத்தார்.

எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவை செய்யவுள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்கும் இந்த அரிய முயற்சி, கல்விக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் ரஹ்மத் பவுண்டேஷன் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பின் இன்னொரு சிறப்பான அத்தியாயமாக அமைந்தது.

இந்நிகழ்வில் கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவருமான சகோதரர் ஆர்.எம் சஜாத் மற்றும் பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கல்வி வழியே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் இத்தகைய பணிகள், இளைஞர் சமூகத்திற்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :