அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்

நூருல் ஹுதா உமர்-

க்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நேர்முகப் பரீட்சை மூலம் நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களுக்கு மேலதிக பொறுப்பாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய நியமனம் கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கான இடைக்கால ஏற்பாடாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :