தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு காரைதீவு கண்ணகி இந்து வித்தி.யில் வெசாக் விஷேட நிகழ்வு




எம்.எஸ்.எம்.ஸாகிர்-

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு முதல் நாள் திகழ்வாக கமு/கமு/ கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தினம் பற்றிய விஷேட நிகழ்வு அதிபர் எஸ்.திருக்குமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயரட்ண கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாணவர்களினால் பாடசாலை வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பொலிஸ் நிலையத்தால் நீராகாரம் வழங்கப்பட்டதுடன் வெசாக் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியினால் சிறப்புரையாற்றுப்பட்டது.

அத்துடன் இந் நிகழ்வில் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :