கல்முனை மாநகர ஆணையாளருக்கு திறந்த மடல்



கல்முனை மாநகர ஆணையாளருக்கு திறந்த மடல்


மாநகர ஆணையாளர் அவர்களுக்கு,

ஆணையாளர் அவர்களே!
ண்மைக்காலமாக கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீரென உருவாகும் இயற்கை அனர்த்தங்கள், வெள்ள நிலைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலைகளில், இரவு பகலின்றி தங்களது தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் துரித நடவடிக்கைகளுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் மக்கள் மத்தியில் பாராட்டுக்குரியதாக உள்ளன.

இந்நிலையில், தற்போது சாய்ந்தமருது மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உருவாகியுள்ள புதிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஒன்றை தங்களது அவசர கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

நிந்தவூர் – காரைதீவு எல்லைப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் வெட்டுவாய்க்காலின் வழியாக கணிசமான அளவில் வடிச்சல் நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அதனுடன் அண்மையில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாகவும் சாய்ந்தமருது தோணா தற்போது நீரால் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.

இதன் விளைவாக சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து தோணாவை நோக்கி செல்லும் வடிகால்களில் தேங்கும் நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் நீண்டநாளாக தேங்கி நிற்பதனால் அப்பகுதிகளில் கடுமையான நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தோணாவை அண்டிய குடியிருப்பு பகுதிகள் ஈரப்பதமடைந்தும் சுகாதாரமற்ற சூழலாகவும் மாறி வருகின்றன. இந்நிலை தொடருமானால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகக்கூடும் என்பதில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு,
சாய்ந்தமருது தோணாவில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும்,
வடிகால்கள் சுத்திகரிக்கப்பட்டு நீரோட்டம் சீராக்கப்படவும்,
நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவும்,
பொதுச் சுகாதார அதிகாரிகள் மூலம் அவசர ஆய்வுகள் முன்னெடுக்கப்படவும் தங்களது தலையீட்டை பணிவுடன் கோருகின்றோம்.

மக்களின் நலனை முன்னிறுத்தி தாங்கள் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

மரியாதையுடன்,
எம்.வை. அமீர்
ஊடகவியலாளர்
சாய்ந்தமருது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :