இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (21) கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த காசோலையை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் உறுப்பினர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இந்நற்காரியத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இறை இல்லங்களின் அபிவிருத்தி என்பது வெறும் கட்டிட நிர்மாணப் பணியாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை, ஆன்மீக வளர்ச்சி மற்றும் மனிதநேயப் பண்புகளை வலுப்படுத்தும் உயரிய சேவையாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ரஹ்மத் பவுண்டேசன் மேற்கொண்டு வரும் இத்தகைய சமூகப் பணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.
மேலும், சமூகத்தின் தேவைகளை உணர்ந்து கல்வி, மதம், மனிதாபிமானம் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ரஹ்மத் பவுண்டேசனின் இந்த பங்களிப்பு, கல்முனை மக்களின் பாராட்டுக்குரிய செயற்பாடாக அமைந்துள்ளது.






0 comments :
Post a Comment