இலங்கைக்கான பாகிஸ்தான் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் -ஜனாதிபதி முன்னிலையில்

அஷ்ரப் ஏ சமத்-

ப்ரல் 21, 2026 இலங்கைக்கான பாகிஸ்தான் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)],
நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இலங்கை ஜனாதிபதியிடம் தனது நியமன கடிதத்தை (Credentials) சமர்ப்பித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அன்பான வாழ்த்துக்களையும் நல் விருப்பங்களையும் இலங்கை ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர் தெரிவித்தார். 
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பாகிஸ்தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையாற்றிய ஒரு சிறந்த பின்னணியைக் கொண்டவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி, அவருக்கு 'ஹிலால்-இ-இம்தியாஸ்' (ராணுவம்) [Hilal-e-Imtiaz (Military)] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு காலாட்படையில் இணைந்த அவர், 35 வருட கால சிறப்பான சேவை க்குப் பின்னர் 2025 இல் ஓய்வு பெற்றார்.

அவரது புகழ்பெற்ற ராணுவ வாழ்க்கையில், தெற்கு வஜிரிஸ்தானில் (முன்னாள் FATA) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தனது காலாட்படை படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய, சியாச்சின் படைப்பிரிவு (Siachen Brigade) மற்றும் ஒரு காலாட்படை பிரிவின் தளபதியாக பணியாற்றிய மை போன்ற முக்கிய பொறுப்புகள் அடங்கும்.
 
இவர் குவெட்டா கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி, ஈரானின் தெஹ்ரானில் ஆயுதப்படை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி, இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள நேஷனல் டிபன்ஸ் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். மேலும், அவர் பாகிஸ்தான் இராணுவ அகாடமியில் போதகராகவும், குவெட்டா கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் சிரேஷ்ட போதகராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரசீக மொழியில் டிப்ளோமா பெற்றுள்ள அவர், இரண்டு முதுகலைப் பட்டங்களையும், அத்துடன் ‘ஆளுமை மற்றும் பொதுக் கொள்கை’ (Governance and Public Policy) துறையில் எம்.பில் (MPhil) மற்றும் கலாநிதி (PhD) பட்டங்களையும் பெற்றுள்ளார். உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர் அவர்கள் திருமணமானவர் என்பதுடன், அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :