மஜீத்புரத்தில் மின் விளக்குகள் சீரமைப்பு : மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயல்பாட்டுக்கு பாராட்டு!





நூருல் ஹுதா உமர்-


ம்மாந்துறை பிரதேச மஜீத்புரம் பகுதியில் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் இன்று முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, பிரதேச சபை தவிசாளரின் அனுமதியுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சியின் சிறப்பு என்னவெனில், மஜீத்புரம் பகுதியில் தற்போது செயலில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் இல்லாத நிலையிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் தங்களது கிராமத்தை புறக்கணிக்காமல் தொடர்ந்து சேவை செய்து வருவது ஆகும்.

அதன்படி, அமீர் அப்னான், முகம்மட் ஆசிக், ஏ.சி.எம். நயீம், முஹம்மட் ஹாலீத், பஹ்மி சுலைமான், பாசீல் உள்ளிட்டோர் இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மஜீத்புரம் மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த மின் விளக்கு குறைபாடு தீர்க்கப்பட்டுள்ளமை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :