பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் - 2026 சம்மாந்துறையில் காசோலைகள் வழங்கி வைப்பு

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

“தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பயனாளிகளுக்கான (10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் (150,000) வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் (25) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரசே செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா மற்றும் உதவி பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான தோழர் நபாஸ், தோழர் நிரோஜன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள், பிரஜாசக்தி தவிசாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :