கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் மீண்டும் அமுலில்



கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

முன்னதாக, எரிபொருள் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காரணமாக ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 18.03.2026 முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இது எரிபொருள் நிரப்ப வருவோருக்கு சலுகையாகவும் அமுல்படுத்தப்பட்டது.

ஆனால், அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கத்தின் ஒற்றை/இரட்டை அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையால், தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலான வாகன நெரிசல் குறைந்துள்ளது.

இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் நிதி நிலைக்குழு தீர்மானத்தின் பேரில், வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம்போல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :