இந்த நிகழ்வு நேற்று (22.03.2026) மாலை 3.00 மணிக்கு கொழும்பு-13, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இளைஞர் அணியின் உப செயலாளர் செல்வி கிருஷானி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இக்கவியரங்கத்தை ஆரம்பித்தபோது இது தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இளைஞர் அணியின் அர்ப்பணிப்பும் முயற்சியும் காரணமாக இன்று இது 10ஆவது அமர்வை எட்டியுள்ளது பாராட்டத்தக்கது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பல இளம் கவிஞர்கள் கலந்து கொண்டு தமது ஹைக்கூ கவிதைகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஈடுபாடு நிகழ்வுக்கு சிறப்பை சேர்த்தது.
நிகழ்வில் பங்கேற்ற இளம் கவிஞர்களின் படைப்புகள் மற்றும் நிகழ்வு தருணங்கள் புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment