புனித ரமழான் மாதம் நமக்கு ஒற்றுமை, கருணை, அமைதி போன்ற உயர்ந்த பண்புகளை கற்றுத்தந்துள்ளது. இந்நோன்பு பெருநாள், அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, வளம் மற்றும் நலன்களை கொண்டு வர இறைவனை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி பிரார்த்திக்கிறது.
உலகளாவிய முஸ்லிம் மக்களுக்கு இஸ்லாம் வழங்கிய இரு பெருநாட்களில் நோன்பு பெருநாள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு மாத காலம் இறைவனுக்காக நோன்பிருந்து, அதனை நிறைவு செய்யும் இந்த நாளில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக வழங்கப்பட்ட பரிசாக இப்பெருநாள் விளங்குகிறது.
இன்று உலகில் நடைபெறும் பாரிய யுத்தங்களால் முஸ்லிம்களும், ஏனைய மக்களும் பெரும் பாதிப்புகளை அனுபவிக்கும் வேளையில் இப்பெருநாள் நம்மை வந்தடைந்துள்ளது. இதனால் நமது நாடும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது.
ஆகவே, உலகில் அமைதி மற்றும் சமாதானம் நிலவவும், யுத்தங்களற்ற மகிழ்ச்சியான உலகம் உருவாகவும், இப்பெருநாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
மு. முஸ்னத்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment