இந்த நிகழ்வின் போது நூலாசிரியர் ஷிபானியா பௌசுல் அவர்களுடன் அவரது துணைவர் ஜலீல் அருகில் காணப்பட்டார். இலக்கியத்திற்கும் கல்விக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் முன்னிலையில் நூலின் சிறப்பு பிரதியினை மரியாதையுடன் வழங்கப்பட்டது.
புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கியத் துறையில் புதியவர்களாக உருவெடுத்து வரும் எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நூல்களின் முதல்பிரதிகளைப் பெற்றுக் கொண்டு அவர்களை பாராட்டி ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களின் முதல்பிரதிகளைப் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் சமூகப் பணியையும் ஹாஷிம் உமர் பௌண்டேசன் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள் தங்கள் கல்வியை சிரமமின்றி தொடர உதவியாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஊடகத் துறையின் வளர்ச்சிக்கும் அவர் பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வருகிறார். ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதுடன், சமூகத்தில் உதவி தேவைப்படும் ஏனைய பலருக்கும் அவர் தன்னார்வமாக ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக கல்வி, இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட பல துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து சேவையாற்றி வரும் ஹாசிம் உமர் அவர்களின் பங்களிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.

0 comments :
Post a Comment