நிந்தவூர் அட்டப்பள்ளம் கடலரிப்பு: பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி – துரித பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவு



எம்.எஸ்.எம். ஸாகிர்-
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களின் பெருந்தொகையான காணிகள் மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதில் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் காணி முழுமையாக கடலுக்குள் காவுகொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. அவர்கள், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், பிரதேச சபை செயலாளர் சிஹாப்தீன், கிழக்கு மாகாண கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எம். துளஸிதாசன், பிரதேச சபை உறுப்பினர்கள் சம்சுன் அலி, இப்திகார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்கள் ஆகியோருடன் இணைந்து இன்று (23) திங்கட்கிழமை மாலை நேரில் கள விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

இதன்போது, சம்பந்தப்பட்ட கரையோரம் பேணல் பொறியியலாளரை உடனடியாக வரவழைத்து, இந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக விரைவாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க எம்.பி. அறிவுறுத்தினார்.

மேலும், இலங்கை கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பான அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த பணித்தார்.

அத்துடன், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கடலரிப்பு தொடர்பான விசேட கூட்டமொன்றை விரைவில் நடத்துவதற்காக, இதற்குப் பொறுப்பான அமைச்சருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடி, விசேட ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :