சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்./ அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் வழிகாட்டலில், பிரதி அதிபர் எப்.எம்.ஆர்.ஹாதிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாடசாலையின் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் அவர்கள் நிகழ்வை முழுமையாக நெறிப்படுத்தினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதி அதிபர், தற்போதைய சவால்கள் நிறைந்த சமூக சூழலில் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் பேணுவதில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் அவர்கள் கலந்துகொண்டு, சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு முறைகள், தற்காப்பு நெறிமுறைகள் மற்றும் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் முன்னணி வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் யூ.எல்.என். ஹுதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :