சம்மாந்துறையில் கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டங்கள் – கள ஆய்வு



நூருல் ஹுதா உமர்-
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களும் குறித்த குழுவினருடன் இணைந்து நேரடி களப் பார்வையில் ஈடுபட்டார்.

இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பணிகளின் தரம், காலக்கெடு மற்றும் பயன்பாட்டு திறன் போன்ற அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

மேலும், திட்டங்கள் துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கிராமிய மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் விரைவில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :