“ரமழானில் ஏழை மக்களின் அடுப்பெரிய துணை புரிவோம் – 2026” அறப்பணி ஆறாம் ஆண்டாக தொடர்கிறது



நூருல் ஹுதா உமர்-

ரமழான் மாதத்தை முன்னிட்டு “ரமழானில் ஏழை மக்களின் அடுப்பெரிய துணை புரிவோம் – 2026” எனும் மகுடத்தில் முன்னெடுக்கப்படும் மனிதநேய அறப்பணி இவ்வாண்டும் ஆறாம் ஆண்டாக தொடர்கிறது.

பிரபல உயிரியல் பாட ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான ரிஷாத் ஷெரீப் அவர்களின் முயற்சியின் பயனாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுதோறும் பொருளாதார நெருக்கடியில் வாழும் தேவையுடைய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை உதவிகளை பெறும் நோக்கில் பணவுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் வசிக்கும் கொடையாளர்களின் தாராள பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த அறப்பணி, தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆதரவாக அமைகிறது.

ரமழான் மாதத்தில் எந்த குடும்பமும் பட்டினியால் தவிக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இவ்வுதவி நடவடிக்கைகள், சமூக ஒற்றுமையையும் மனிதநேயப் பண்புகளையும் வலுப்படுத்தும் ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

இத்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைத்து கொடையாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், மேலும் பலர் இணைந்து இந்த மனிதாபிமான பணியை விரிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :