இந்நிகழ்வில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல். பாயிஸ், எஸ்.ஐ. றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸின் இணைப்பாளர் எம்.எச். அஜ்வத் (SO) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகளின் இளைஞர் அமைப்பாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது, இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து, கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 06 வட்டாரங்களிலும் தனித்தனியாக இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டம் மூலம், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்து, கட்சியின் செயற்பாடுகளை வலுவாக்கி, சமூக மற்றும் அரசியல் பணிகளில் இளைஞர்களின் பங்கு மேலும் உயர்த்தப்படும் எனக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.















0 comments :
Post a Comment