கடந்த வாரங்களில் ஈரானில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட கலகக்காரர்களுக்கு ஈரானிய அரசு தண்டனை வளங்கிவிடாமல் அவர்களை காப்பாற்றுவதில் அமெரிக்க அதிபர் மிகவும் தீவிரமாக உள்ளார்.
இதன் மூலம் ஈரானில் ஏற்படுத்தப்பட்ட கலகத்துக்கும், அமெரிக்காவுக்கும் நேரடி தொடர்பு உள்ளதனை உறுதிப்படுத்துகிறது.
இவ்வளவு தொகையினர் ஈரானிய படையினர்களினால் கைது செய்யப்படுவார்கள் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
கத்தாரும், சவூதி அரேபியாவும் தங்களது நாட்டிலிருந்து ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுமதி மறுத்திருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்சும், ஜோர்தானும் மிக தீவிரமான ஆதரவினை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளதுடன், அங்கு தாக்குதலுக்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது.
இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள Diego Garcia தீவு மற்றும் ஈரானை இலக்குவைத்து விமானம் தாங்கிக் கப்பல், ஏனய பிரமானடமான கடற்படை கலங்களையும், விமானங்களையும் குவித்துள்ள நிலையில், மறுபுறத்தில் அமெரிக்காவின் எந்தவித அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் எந்தவித தாக்குதலையும் எதிர்கொண்டு எதிர்த்தாக்குதலுக்கு ஈரான் தயாரான நிலையில் உள்ளது.
முகம்மத் இக்பால்

0 comments :
Post a Comment