அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10) புதன்கிழமை இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.ஏ. அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment